முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் சரத் மொஹொட்டி ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் 24.09.2025 உத்தரவிட்டுள்ளது.
கடற்படை புலனாய்வு பணியகத்தில் பதவியில் இருந்தபோது, பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பான குற்றச்சாட்டில், நிஷாந்த உலுகேதென்ன கடந்த ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டார்.










