வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் பங்குபற்றுவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) புதன்கிழமை சுவிட்ஸர்லாந்து, ஜெனீவா நகரை நோக்கிப் பயணமாகவுள்ளார்.
நாளை மறுதினம் (26) வெள்ளிக்கிழமை இந்த மீளாய்வுக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து வலிந்து காணாமலாக்கப்படுகின்றமையிலிருந்து பாதுகாப்பதற்காக மாநாட்டில் ஒரு பங்குதாரராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.










