களுத்துறை வடக்கில் உள்ள வஸ்கடுவ – கொங்காஸ் சந்தி ரயில் கடவை பகுதியில் கார் ஒன்று ரயிலில் மோதியதில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தின்போது, காருக்குள் சிக்குண்ட இருவரையும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் முற்றிலும் சேதமாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










