களுத்துறை, கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3060 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹொரணை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (06) பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கல்பாத பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










