இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் 7 வருடங்களின் பின்னர் கடந்த 3ம் திகதி சனிக்கிழமை முழு நாளும் வைத்தியசாலை வளவில் நடைபெற்றது. வைத்தியசாலை பணிப்பாளர் விஷேட வைத்தியர் புஷ்பா கம்லத்கே தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் நீர்கொழும்பு மாநகர ஆணையாளர் நுவனி சுதசிங்க பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேன, சிறைச்சாலை அத்தியட்சகர் ஜீவ இந்திரஜித் பிரனாந்து உட்பட அதிதிகள் கலந்துகொண்டனர். அங்கு இடம் பெற்ற போட்டிகளில் வைத்தியசாலை ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினர் பங்குகொண்டனர்.
வைத்தியசாலை பணிப்பாளர் புஷ்பா கம்லத்கே தேசிய கொடியை ஏற்றுவதையும் மாநகர ஆணையாளர் நுவனி சுதசிங்க மங்கள விளக்கேற்றுவதையும் பங்குகொண்டவர்களையும் காணலாம்.













