முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்குவதனை தடுக்கும் வகையில் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் குறித்த வழக்கு 30.07.2024 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிரான தடையுத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.










