இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிவரும் பேருவளையில் அமைந்துள்ள ஜாமியா நளீமியா கலாபீடம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஆகஸ்ட் 19 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, ஜாமியா நளீமியா கலாபீடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்றைய கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத் பிரதம அதிதியாகவும், இந்தியாவின் டெல்லி மாநகரைச் சேர்ந்த மௌலானா இனாமூல் ஹஸன் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
ஜாமியா நளீமியாவின் ஸ்தாபகரும் நிறுவனத்தின் தலைவருமான அல்ஹாஜ் எம்.ஐ.எம். நளீம் அவர்களின் முக்கிய பங்களிப்புடன், அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் இக்கலாபீடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கலாபீடத்தின் திறப்பு விழாவிற்காக 1973ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அழைப்பிதழும் இச்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.










