கொழும்பு
அனுராதபுரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட
பிரபல அறிவிப்பாளரும் அனுராதபுரம் ஸாஹிரா பாடசாலையின் பழைய மாணவருமான அல்-ஹாஜ் கலை நிலா உவைஸ் ஷெரீப் அவர்கள் செப்டம்பர் (04) காலமானார்.
அன்னார் மர்ஹூம் சுல்தான் மொஹிதீன் (Town ஆராச்சியார்) அவர்களின் மகனும் நவாசியா வின் கணவரும் ஸஹ்ரான் மற்றும் சாஹிலாவின் தந்தையும் மர்ஹூம் ஜெய்னுலாப்தீன்(ஓய்வுபெற்ற அதிபர்), துவான் தர்விஸ், நெய்மா,சித்தி நிசெளசியா (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரின் சகோதரரும் மொஹமட் அலி மொஹமட் டில்ஷான் (நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர்),பஸீல், ஆகியோரின் தாய் மாமாவுமாவார்.
அன்னார் Star tv/ Radio Ceylon போன்ற பிரபல ஊடகங்களிள் அறிவிப்பாளராக கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும் அன்னாரின் பிறந்த ஊரான அனுராதபுரத்திற்கு செய்யும் சேவையாக கருதி அனுராதபுரம் ஜனாஸா சேவை சங்கத்தின் ஜனாஸா அறிவிப்புக்களை அவரது அலகியா குரலில் குரல் பதிவாக மாற்றி பதிவிட்டு வந்தார்.
அன்னாரது ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் மாளிகாவத்தை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.