மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம், இலங்கையில் பதிவாகியுள்ளது.
தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.