தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கடந்த 3 மாதங்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம் நிலவிவருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெப்பம் பதிவாகியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஓன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுவதாக அங்குள்ள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வெப்ப தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.