முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (20) காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற கூட்டமொன்று தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








