இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் குழுவொன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு இன்று சனிக்கிழமை (29) காலை சென்றுள்ளது.
விசாரணையொன்று தொடர்பில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ரவி கருணாநாயக்க முன்னிலையாகாததைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாவதை ரவி கருணாநாயக்க வேண்டுமென்றே தவிர்க்கவில்லை என அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிடப்பட்ட தினத்தில் அவரால் முன்னிலையாக முடியவில்லை என அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், அவருக்காக அவரது சட்டத்தரணிகள் வேறு ஒரு தினத்தை வழங்குமாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.ரவி கருணாநாயக்க கொழும்பில் இல்லையென அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அவர்கள் அவரது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.









