இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (15) சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கச்சேரியடியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக வளாகத்தில் காலை 9 மணியளவில், துணைத் தூதர் சாய் முரளி இந்திய தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் சாய் முரளி வாசித்தார்.
இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








