( ஐ. ஏ. காதிர் கான் )
இந்தியா – தமிழ்நாடு, கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த “கவி கற்பகவிருட்ச
விருது” பெற்ற –
குட்டிப் பெண் ஆளுமை “இளங்கவி”
அ.ம. உம்மு ஹானி புஷ்ரா, காஞ்சி முத்தமிழ் மையத்தின் உயரிய விருதான “சாயா விருட்சம்” (நிழல் தரும் மரம்) விருதைப் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவில் இவ்விருதைப் பெறத் தெரிவாகியுள்ளவர்களில் இவரும் ஒருவராவார்.
“மலைகளின் இளவரசி” என வர்ணிக்கும் கொடைக்கானலில் கோடை கொண்டாட்டமாக, இம்மாபெரும் உயரிய சிறப்பு விருதுகள் வழங்கும் விழா, காஞ்சி முத்தமிழ் மையத்தின் நிறுவனர் பாவலர் சூ. லாரன்ஸ் ஏற்பாட்டில், கடந்த மே 30 ஆம் திகதி, கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூல் (KPS) “ஹை ஸ்கூல் ஸ்டாப்” கொடைக்கானலில் இடம்பெற்றது.
காஞ்சி முத்தமிழ் மையம், 32 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு துறைகளில் குறிப்பாக ஏழை எளிய மக்கள் மத்தியில் “கல்வி மருத்துவம் கலை” போன்றவற்றின் மூலம் மக்கள் பணி செய்து, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தியும்
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவில் பல்துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தியும், அவர்களை ஊக்கப்படுத்தியும் தொடர்ந்து செயலாற்றி வரும் ஒரு அமைப்பாகும்.
காஞ்சி முத்தமிழ் மையத்தின் இந்நிகழ்வுகளில்,
இந்தியாவின் பெருமை மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம், IAS IPS IRS போன்ற உயர் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள், திரையுலக ஜாம்பவான்கள், பிரபல சமூக ஆர்வலர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என இன்னும் பலர் கலந்து கொண்டு விருதுகள் பெற்றும், வழங்கியும்
சிறப்பித்துள்ளனர் என்பது பெருமைக்குரியது.
அந்த வரிசையில், இவ்விருது பெறத் தேர்வாகியுள்ள உம்மு ஹானி புஷ்ராவுக்கு, காஞ்சி முத்தமிழ் மையம் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை, மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக்கொள்கிறது.
உம்மு ஹானி புஷ்ரா, கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி,
“உஸ்வத்துல் ஹஸனா” பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயிலும் இளம் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )








