கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் அமைந்துள்ள ஆறு பயண சேவை கவுன்டர்களை இயக்குவதற்கான சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய போட்டி அடிப்படையிலான கேள்விப்பத்திர நடைமுறையின் கீழ் 10 நிறுவனங்கள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன. அவற்றை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தர கொள்முதல் குழு, மூன்று வருட காலத்திற்கு சலுகைகளை வழங்க பரிந்துரைத்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் முன்மொழியப்பட்ட தொகைகள்:
- Casons Travel (Private) Ltd – ரூ. 251.03 மில்லியன்
- J N W Lanka Tours – ரூ. 209.67 மில்லியன்
- Awavia Tours (Private) Ltd – ரூ. 189.66 மில்லியன்
- Ceylon Arrivals (Private) Ltd – ரூ. 183.60 மில்லியன்
- Ayubowan Tours & Travels (Private) Ltd – ரூ. 171.53 மில்லியன்
- Explore Vacations and Travels (Private) Ltd – ரூ. 234.73 மில்லியன்









