இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு சிறைசாலையில் சிறைக்கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 20க்கும் மேற்பட்ட கைதிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள் மற்றும்
சிறைக் கைதிகளின் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் போது காயமடைந்த 25 மேற்பட்ட கைதிகள் நீர்கொழும்பு வைத்திய சலையில்
அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் மருத்துவமையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படை வரவழைக்கப்பட்டுள்ளது.
மோதலுக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.









