விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக, அவரது தாயாரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் சிறைச்சாலை வளாகத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் சற்றுமுன்னர் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்குள் சென்றுள்ளார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









