நானுஓயா கிளாரண்டன் தோட்டத்தில் லொறி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து லயன் குடியிருப்பின் மீது வீழ்ந்து 25.04.2026 இரவு விபத்திற்குள்ளானது
நானுஓயா கிளாரண்டன் பகுதியில் இருந்து நானுஓயா ரதல்ல வழியாக கிரிமிட்டி பகுதியை நோக்கி பயணித்த லொறி ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தினால் லயன் குடியிருப்பின் ஒரு வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் லொறிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது லொறியின் சாரதி மற்றும் இரு உதவியாளர் இருந்துள்ளனர்.
எனினும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அம்மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.









