சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை நாளை நடத்துவதில் சிரமம் ஏற்படும் பட்சத்தில், அது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட பாடசாலைகளை நாளை நடத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை உரிய பாடசாலை அதிபர்களே மேற்கொள்வர் என வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.








