பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து 19.06.2025 வியாழக்கிழமை நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சகத்துடன் சுமார் 3 மணி நேரம் நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்துள்ளார்.
சில பிரச்சினைகள் இன்று தீர்க்கப்பட்டதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கு இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சில பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்க தங்களது சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
11 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவற்றில் 7 கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்தார்.