[04:43, 21/01/2025] YOOSUF ROSHAN 🥰: கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, ஐந்து மாகாணங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமத்திய மாகாணத்தில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 356 நபர்களும், வட மாகாணத்தில் 491 குடும்பங்களைச் சேர்ந்த 1,496 நபர்களும், கிழக்கு மாகாணத்தில் 5,086 குடும்பங்களைச் சேர்ந்த 14,806 நபர்களும், மத்திய மாகாணத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 33 நபர்களும், ஊவா மாகாணத்தில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 239 நபர்களும், மொத்தமாக 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.
சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் 98 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 77 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் எட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது
[04:45, 21/01/2025] YOOSUF ROSHAN 🥰: பிரமிட் மோசடியில் ஈடுபட்ட 21 நிறுவனங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை முன்னெடுத்துச் சென்ற 21 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது