ஏ.எஸ்.எம்.ஜாவித் 2025.03.19
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணியின் (YMMA) இப்தார் நிகழ்வு நேற்று (18.03.2025) முன்னணியின் தேசியத் தலைவர் அம்ஹர் ஷெரிப் தலைமையில் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தின் ஏ.எம்.ஏ. அஸீஸ் மண்டபத்தில் இடம் பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியும் கௌரவ அதிதிகளாக துருக்கி நாட்டின் தூதுவர் மற்றும் மாலை தீவு நாட்டின் கவுன்சிலர் அலி சரீப் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அறிவியல் மற்றும் தொழிநுட் அமைச்சின் செயலாளர் வை.எல்.எம்.நவவி, முன்னணியின் வமய விவகாரப் பிரிவு தலைவர் பௌஸான் அன்வர் முன்னணியின் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள அங்கத்தவர்கள், உலமாக்கள், மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வரவேற்புரையை முன்னணியின் தலைவர் அம்ஹர் ஷெரிப் நன்றி உரையை முன்னணியின் பொதுச் செயலாளர் ஆசிப் சுக்ரி நிகழத்தினார்


