இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் மற்றும் நலன்புரி தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 12,803,174.35 ரூபாவை நன்கொடையாக வழங்கியது.
அதற்கான காசோலையை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வு), பணிப்பாளர் (நிர்வாகம்) விங் கமாண்டர் சேனக ருவன்பத்திரண (ஓய்வு) மற்றும் பணிப்பாளர் (நிதி) எம்.கே. ஜயந்த ஆகியோர் 01.01.2026 ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.










