கொழும்பு: RJ Foundation,கொழும்பு டைம்ஸுடன் இணைந்து, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரத்மலானாவில் உள்ள இஸ்லாமியா ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தில் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
அம்மாணவர்களுக்கு பள்ளி புத்தகங்கள், எழுதுபொருட்கள், சீருடைகள், பள்ளி பைகள் மற்றும் காலணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த விழாவின் தலைமை விருந்தினரான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதர் டாக்டர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் அவரது துணைவியார், இந்த பொருட்களை குழந்தைகளுக்கு விநியோகித்தனர்.
தூதர் மையத்திற்கு இரண்டு பெரிய கம்பளங்களையும் பரிசாக வழங்கினார், அவை அதன் செயலாளர் மொஹிதீன் காதர் தலைமையிலான மைய நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.
கொழும்பு டைம்ஸ் தலைமை ஆசிரியர் முகமது ரசூல்தீன் மற்றும் R.J. Foundation இன் தலைவர் எம்.ஜே.எம். ரிஸ்வி மற்றும் அவரது மனைவி ருக்ஷானா ரிஸ்வி, விஷேட தேவைப்படுபவர்கள் மற்றும் அனாதை குழந்தைகள் இல்லத்தின் மேலாளர் இம்தியாஸ் கவுஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .
புகைப்படங்கள் சலீம்