உழைக்கும் போது செலுத்தும் வரியான PAYE வரி திருத்தம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், அது எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் எஹலியகொடவில் 28.08.2024 இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க,
“இன்னொரு சிக்கல் என்னவென்றால், உழைக்கும் போது செலுத்தும் வரியாகும்.
அதுவும் பெரிய பிரச்சனை. ஐஎம்எப் மற்றும் நாங்கள் அதை திருத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டோம்.
அடிப்படை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு பரிந்துரை செய்துள்ளோம்.
அவர்கள் மற்றொரு திட்டத்தை முன்வைத்துள்ளனர். எனவே இந்த இரண்டு முன்மொழிவுகளையும் விவாதித்து ஒரு உடன்பாட்டை எட்டும்போது, சரியான தொகையை அப்போது அறிவிப்போம்.” என்றார்.