கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக செயல்படுத்தப்படும் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் 20 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் Next Sri Lanka அரசாங்கத்தின் திட்டத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் 18 வயது முதல் 35 வயது வரையான 50000 இளைஞர் யுவதிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் ஒன்றை மேற்கொள்வதற்கு பூரண தொழிற்பயிற்சிப் புலமைப்பரிசிலை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூலை 15-ம் திகதி சர்வதேச இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு ஜூலை 15 முதல் 23 வரை வாரம் முழுவதும் நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலகங்களில், காலை 9.00 முதல் மாலை 4.00 இவரை இளைஞர் யுவதிகளின் திறனை பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
www.nextsrilanka.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து நீங்கள் இதற்காக பதிவு செய்து கொள்ள முடியும்.