புத்தளம், ஜூலை 30 2025
சூரிய சக்தி உற்பத்தி மற்றும் நவீன சூழலியல் தீர்வுகளில் முன்னணியில் உள்ள Markward Solar Power நிறுவனம், தனது புதிய கிளையை புத்தளத்தில் இன்று திறந்து வைத்தது.
இந்த விழா புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி, பிரதம விருந்தினராக புத்தளம் மாநகர சபை மேயர் கௌரவ ரின்சாத் இன்ஞினியர் அவர்கள் பங்கேற்றதுடன்,
பிரதிவிருந்தினர்களா புத்தளம் பிரதி மேயர் எம்.என்.எம். நுஸ்கி,மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம். முர்ஸித்,Mercy Lanka நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் முனாஸ் ரியால்,மற்றும் பல முக்கிய உலமாக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுவானது நிறுவனம் உரிமையாளர் அல்ஹாஜ் இர்பான்,தொழில் இயக்கத் தலைவர் முக்ஸித்,புத்தளம் கிளை முகாமையாளர் முஜாஹித் நிஸார் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது.
Markward Solar Power நிறுவனம் தனது கிளை விரிவாக்கத்தின் மூலம், பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பணியில் மேலும் ஒரு முக்கிய அடியெடுத்து வைத்துள்ளது.