பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு ஊடக பாவனைகள் தொடர்பான நடைமுறை அறிவையும் அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “Kaledoscope 2024 Screen media for Gen-Z” ஊடகத் திட்டம் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள், கல்விமான்கள் மற்றும் பிரபல ஊடகவியலாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றுடன் இணைந்து இந்த செயலமர்வுகள் நடத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு 31 பாடசாலை ஊடகப் பிரிவுகளிலிருந்து 158 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இதற்கு யுனிலீவர் லங்கா, SLIT கல்வி நிறுவனம், லங்கா ஐஓசி மற்றும் மகவெலி நிலையம் ஆகியன அனுசரணை வழங்குகின்றன.
இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தமது கருத்துகளை மாத்திரம் தெரிவிக்கும் தற்போதைய ஊடகங்களின் செயற்பாடுகள் சமூகத்தை தவறாக வழிநடத்துவதாக அமைந்துள்ளது. எனவே, பாடசாலை மாணவர்களுக்கு ஊடகக் கல்வியை வழங்குவது மிகவும் அவசியமானது எனத் தெரிவித்ததோடு இதிலிருந்த மாணவர்கள் உச்ச பயனனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பெறுமதியான சந்தர்ப்பத்திற்கு தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பாடநெறியில் பல தொழில்நுட்ப விடயங்கள் உள்ளன. பல நிறுவனங்களுக்குச் சென்று பெறக் கூடிய அறிவை இந்த ஒரு பாடத்திட்டத்தின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு ஏன் ஊடகக் கல்வி வழங்க வேண்டும்? பாடசாலை மணாவர்கள் ஏன் ஊடகக் கல்வியைப் பெற வேண்டும்? இலங்கையில் உள்ள பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் தமது கருத்தை நாட்டுக்கு வழங்குவதைத் தான் செய்கின்றன. இது மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடு. ஊடக அமைப்பு தனது சொந்த ஊடக விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயற்படுகின்றன. மக்களாகிய நாம் அதனைப் புரிந்து கொள்ளாவிட்டால் தவறான பாதையில் செல்ல வேண்டியிருக்கும். அதனைப் புரிந்துகொள்வதே இந்தப் பாடநெறியின் பிரதான அம்சமாகும்.
நாங்கள் எண்கணிதம் கற்கும் சமயத்தில், அந்த பாடத்தை அதிபர் எமக்குக் கற்பிப்பார். அவர் உயரமான தேசிய ஆடைகளை அணிந்த வரும் ஒரு ஆசிரியர். அவர் கரும்பலகையில் எண்கணித சிக்கல்களைத் தீர்ப்பார். ஆனால் அந்த பிரச்சினையை தர்க்கரீதியாகத் தீர்க்கும் முறையை நாங்கள் கற்பிக்கவில்லை. பாடசாலை காலங்களிலும், பல்கலைக் கழக நாட்களிலும் பிரச்சினைகள் பற்றிய கோட்பாட்டு அறிவு நமக்குக் கொடுக்கப்பட்டாலும், அவற்றைத் தீர்க்கும் தர்க்கம் தொடர்பில் எமக்குக் கற்பிக்கப்படவில்லை. அன்று வழங்கப்படாத அறிவை இன்று வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம். ஊடக நிறுவனங்கள் எவ்வாறு நடந்து கொள்ளும் விதம் மற்றும் அவர்களின் விருப்பங்களை புரிந்து கொள்ளும் திறன் மாணவர்களுக்கு ஏற்படும்.
ஊடகங்கள் காட்டும் சொசேஜஸை மட்டும் தான் சாப்பிட வேண்டுமா? பத்திரிகைகளில் எழுதப்பட்ட செய்திகளைப் படிக்கும் போது அதிலுள்ள மெருகூட்டல்களை நாம் ஏற்க வேண்டுமா என்பதை இதன் ஊடாக அறிய வாய்ப்பு ஏற்படும். இல்லையென்றால், எங்கள் சொந்த கருத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோமா என்பதை இந்த பாடநெறியின் மூலம் புரிந்து கொள்ளும் திறன் உங்களுக்குக் கிடைக்கும். இதன் ஊடாக இலங்கையின் எதிர்காலத்தை சிறந்த இடத்திற்கு இட்டுச் செல்ல முடியும்.
கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா,
நமது பிள்ளைகளின் கல்வி அறிவைப் போலவே மனநலமும் மிகவும் முக்கியமானது. பிள்ளைக்கு மனநலம் சரி இல்லை என்றால், அரச பதவி கிடைத்தாலும் பயனில்லை. எனவே, இதுபோன்ற ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்வது மிகவும் பாராட்டத்தக்கது. இவ்வாறான பெறுமதிமிக்க வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மற்றும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று, தனியார் மற்றும்அரச துறைகளில் உள்ள புதிய பணியாளர்களைப் பற்றி கேள்விப்படுவது நல்ல விடயமல்ல. ஒத்துழைப்புடன் செயல்பட முடியாது. படைப்பாற்றல் இல்லை. அவை சான்றிதழ்கள் மட்டுமே உள்ளன.அதைத் தாண்டி ஏதாவது பெற, இது போன்ற மேலதிக திட்டத்தை ஏற்பாடு செய்வது அவசியம். புத்தக அறிவை விட தர்க்கரீதியாக சிந்தித்து ஒத்துழைப்புடன் செயல்படும் பிள்ளைகளின் தலைமுறை இன்று நமக்குத் தேவை.
தர்க்கரீதியாக சிந்திக்கவோ, ஒத்துழைப்புடன் செயற்படவோ, ஆக்கப்பூர்வமாக செயல்படவோ திறன் இல்லாவிட்டால், பிள்ளைகள் கற்றுக்கொள்வது சமூகத்திற்கு சரியாக செல்லாது. எனவே, மனப்பாடமாக வாசிக்கும், பிறரைப் பின்பற்றாத ஊடகக் குழு உருவாகக் கூடாது. நாங்கள் வேறு யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை. உங்களுக்கான தனித்துவமான முறை உங்களிடம் உள்ளது.
உங்களுக்கான தனித்துவமான அந்த வடிவம் உங்களிடம் உள்ளது. உங்களுக்குத் தனித்துவமான அந்த போக்கை கண்டுபிடியுங்கள். நீங்கள் சொல்வதை மற்றவர்களுக்கு சரியாக தெரிவிக்க வேண்டும். கண்பதையும் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். விமர்சன ரீதியாகப் புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும். தனியாக செய்யாமல் கூட்டாக ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.