Faaz Bridal and Mehendi Academy கொழும்பு தனது வருடாந்திர கண்காட்சியை நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள பொது நூலக ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்தது. இது ஃபாஸ் பிரைடல் மற்றும் மெஹந்தி அகாடமியின் ஸ்தாபகர் திருமதி அஸ்மா பாயிஸ் இன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கேக்குகள், மெஹந்தி, சமையல், சமையல் கலை மற்றும் அழகுசாதனப் பொருட்களை காட்சிப்படுத்தினர்.
என்.கே. வெற்றி இயக்குநர் திருமதி ஏ.எஸ்.எஸ். கதீஜா மற்றும் ஷபீனா இர்ஃபான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.










