ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் (Online) பதிவு செய்யும் திட்டம் 26.12.2025 ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் இச்சேவைகள் இணையவழியில் முன்னெடுக்கப்படும் என தொழிலாளர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று முற்பகல் 9.00 மணிக்கு தொழிலாளர் அமைச்சின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.










