சிறந்த ஒரு நாட்டினை உருவாக்கிடும் நோக்கில் இலங்கைத் திருநாட்டின் மேன்மைதங்கிய ஜனாதிபதி கௌரவ அனுரகுமார திஸ்ஸநாயக்காவின் எண்ணத்தில் உருவாகிய ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டமானது கடந்த ஆறு மாதங்களாக சிறப்பான முறையில் பல்வேறு துறைகளில் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக 09.07.2025 புதன்கிழமை தேசிய நிகழ்ச்சித் திட்டமாக நாடளாவிய ரீதியின் ‘Clean School ‘ வேவைத்திட்டம் அனைத்து பாடசாலைகளிலும் காலை 8.00 மணிமுதல் 1.00 மணிவரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுத்தமான சுற்றுச்சூழல் ஒரு ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குகிறது. சுத்தமான இலங்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் கடமையும் ஆகும். தெருக்களில் குப்பை வீசாமல், மீள்சுழற்சி பொருட்களை பயன்படுத்தி நாம் நாட்டை சுத்தமாக வைத்திருக்கலாம். அதேபோல, பள்ளி வளாகத்தையும் கற்கும் சூழலையும் சுத்தமாக வைத்திருத்தல் மாணவர்களின் கடமையாகும்.
கழிவுகளை உரிய முறையில் அகற்றல், கழிப்பறைகளை சுத்தமாக வைத்தல், மற்றும் மரங்களை நட்டு பராமரித்தல் போன்றவற்றோடு மாணவர்களின் ஒழுக்கம், உயரிய கற்றல், சிறந்த விளையாட்டு உடலாரோக்கியம், சிறந்த சுகாதாரம், தொழில்நுட்பத்திறன் விருத்தி, சமூக அக்கறை, தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தல், ஆற்றல்களை மேம்படுத்தல் இவை அனைத்தும் நிலைபேறான சிறந்த வளம்மிக்க நாட்டிற்கு மாணவர்களை தயார்படுத்தலாகும்.
மேற்குறித்த செயற்பாடுகளை உள்ளடக்கி நேற்றைய தினம் ‘Clean School’ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளிலும் ‘Clean School’ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை கலைமகள் வித்தியாலத்தில் நடைபெற்ற Clean School வேலைத்திட்டத்தின் பதிவை காணமுடியும்.