இஸ்மதுல் றஹுமான்
முன்னால் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான இரு கடவுச் சீட்டுக்களை வைத்திருந்த வழக்கில் அவர் சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.
முறைசாரா கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்டதாக முன்னால் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு இன்று 1ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதம நீதிபதி றகித்த அபேசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
முன்னால் அமைச்சர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
2015.10.23 ம் திகதி வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் வந்தபோது அவரிடம் இரு கடவுச்சீட்டுகள் இருந்துள்ளன. தூதரான்மை கடவுச்சீட்டு காலவதியாகி இருந்ததுடன் அதில் செல்லுபடியான வீஸா பதியப்பட்டிருந்தது. மற்றயது செல்லுபடியான சாதாரண கடவுச்சீட்டாகும். அதில் வீஸா பதியப்பட்டவில்லை.
இந்த நிலையில் முறைசாரா கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டு செல்ல முற்பட்டு குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டில் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் அவருக்கு எதிராக வழக்குத் கொடுக்கப்பட்டது.
விமல் வீரவன்ச அப்போது எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் வந்தபோது அவரின் கடவுச்சீட்டை பரிசோதித்த குடிவரவு குடிஅகழ்வு அதிகாரிகள் கடவுச்சீட்டு காலவதியாகியுள்ளதாகவும் அதில் பதியப்பட்டுள்ள வீஸா செல்லுபடியானது எனக்கூறி புதிதாக கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுவந்தால் வெளிநாடு செல்ல முடியுமென கூறியுள்ளனர். அதற்கினங்க மறு நாள் புதிய கடவுச் சீட்டையும் வீஸா பதியப்பட்ட பழையதையும் எடுத்துச்சென்றபோதே கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டதரணி சரத் ஜயமான்ன வாதாடுகையில் செல்லுபடியற்ற கடவுச் சீட்டை வைத்திருந்தது குற்றமென்றால் ஏன் முதல் நாள் கைது செய்யாமல் மறுநாள் வந்த போது கைதுசெய்தார்கள் எனக்கு கேள்வி எழுப்பி தொடர்ந்தும் வாதாடி அவரை விடுதலை செய்யுமாறு கோரி வந்தார். மேலும் குடிவரவு குடிஅகழ்வு திணைக்களத்தினால் பெற்றுக்கொண்ட தகவலுக்கு அமைய வீசா பதியப்பட்ட செல்லுபடியற்ற கடவுச்சீட்டுடன் செல்லுபடியான கடவுச்சீட்டையும் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முடியும் என மன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பாக குடிவரவு குடிஅகழ்வு திணைக்கள அதிகாரிகளும் சாட்சியம் அளித்திருந்தனர்.
நீண்டகால விசாரணையின் பின்னர் நீதவான் விமல் வீரவன்சவை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்தார்.










