எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் பற்றிய தகவல்கள், தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அபராதம் செலுத்தப்படும் தபால் நிலையங்கள் ஊடாக குற்றத்தின் தன்மை, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையம், சாரதி அனுமதிப்பத்திரத்தின் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் இந்த தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.