தரம் 8-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI – Artificial Intelligence பாடத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (21) பிற்பகல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், கல்வி அமைச்சுக்கும் Microsoft நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
Microsoft-இன் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான தலைவர் உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.
முதற்கட்டமாக, 20 மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளில் AI பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த பாடத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.