இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அண்மைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் விசாரணை செய்வதற்கு 01.02.2024 இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 05 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை விசாரணைக்காக அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.