(அஷ்ரப் ஏ சமத்)
ஜாமியா நளிமியா கெம்பஸ் காலம் சென்ற கொடை வல்லள் நளிம் ஹாஜியார் அவர்கள் அதனை ஆரம்பித்து இன்று 11.02.2024 ஐம்பது வருடங்கள்……….பூர்த்தி
எனது தந்தையும் அரச மருதானை தொழில்நுட்பக் கல்லுாாியில் அப்போது அதிபாரகக் கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் காலம் சென்ற நளீம் ஹாஜியார் எனது தந்தை காலம் சென்ற எம்.எச்.ஏ சமத் அவர்களை அழைத்து இக்ராஹ் தொழில் நுட்பக் கல்லூரி அதிபராகக் கடமையேற்கும்படி கூறினார்.
தந்தை உடன் கடமை யேற்று அங்கு பேருவளை நளிமியா வின் அமைக்கப்பட்டுள்ள இக்ரா டெக்னிக்கல் கொலிஜ் ஸ்தாபக அதிபராக 5 வருடங்கள் சேவையாற்றினார்கள்.
அங்கு நளிமியா குவாட்டஸ் தங்கியிருந்தார். நானும் அடிக்கடி அங்கு சென்று தங்கிநிற்பேன்……
….அங்கு லீவு நாட்களில் சிறிய கார் ஒன்றில் சுபஹ் தொழுகைக்காக நளிம் ஹாஜியார் வருகை தந்து நளிமியா முன்றலில் உள்ள பள்ளிக் கட்டில் அமர்ந்து கொண்டு எனது தந்தை சமட், மற்றும் , கலாநிதி சுக்ரியுடன் கதைத்துக் கொண்டிருப்பார்.
அவரது சிறிய காலத்தின் வாழ்க்கை வரலாறுகள், தனது உம்மாவின் கஸ்டம். மற்றும் அவரது கஸ்டமான வாழ்க்கை புரட்சி, ..அவர் சிறுவயதில் கல்வியை விட்டுவிட்டு இரத்தினபுரியில் ஒர் வெற்றிலைக்கடையில் வேலை செய்த நிகழ்வு முதல் உழைத்து அப் பணத்தில் ஹாஜியாரின் உம்மா ஒர் சிறிய வீடமைத்து அதில் முதல் தூங்கிய துாக்கம் உலகில் எந்த மாளிகையில் தூங்கினாலும் அதுபோல் குளிர்ச்சி யில்லை என பேசிக் கொண்டிருப்பதை நளிம் ஹாஜி சொல்லிக் கொண்டிருப்பதை எங்களிடம் வந்து தந்தை கூறுவார்.
கல்விக்கு உதவி செய்பவர்கள் என்றும் மரணிப்பதில்லை. கற்பவனாக இரு கற்றுக்கொடுப்பவனாக இரு, அல்லது கற்பவருக்கு உதவி செய்பவனாக இரு ஆனால் நான்காவது ஆளாக இராதே
யா அல்லாஹ் இம் 3வரும் காலம் சென்று விட்டார்கள். அவர்களை அல்லாஹ் சுவனபதியில் வாழ வல்ல அல்லஹ் இறைஞ்சுகிறேன்.. ஆமின்


