யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்துடன் இணைந்து, வரையறுக்கப்பட்ட
‘இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டை சேவைகள் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை 19.01.2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமானது.
இந்த வர்த்தக கண்காட்சி 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி ந.கெங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தினர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுமார் 300 க்கும் மேற்பட்ட காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலர் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 1௦ சிறு முயற்சியாளர்களுக்கும்,தொழில் திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட 1௦ சிறு முயற்சியாளர்களுக்கும்’ இலவசமாக காட்சி கூடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் புதிய தொழில் நுட்பங்கள், புதுப்பிக்கதக்க சக்திகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கவிரன்
யாழ்ப்பாணம்