குவைத்தில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த இத்தாலியப் பிரஜைகளான அன்டோனியோ சக்கோச்சியோ மற்றும் இமானுவேல் லோ ருஸ்ஸோ ஆகியோருக்கு நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குவைத் நகரிலுள்ள புனித குடும்ப பேராலயத்தில் (Holy Family Cathedral) இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலில் இருவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.









