நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த ‘FRANCOIS’ கப்பல் கடந்த 18ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன், அதிலுள்ள எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவரும் நான்காவது கப்பலான ‘CORINTHIAN’ எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எரிவாயுத் தொகுதிகள் கிடைக்கப்பெற்றதும், நாடு முழுவதும் விநியோகம் சீரமைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சந்தைக்கு எவ்வித தடையுமின்றி வழக்கம்போல் அத்தியாவசிய எரிவாயுவைத் தொடர்ந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோருக்கு நிறுவனம் உறுதியளித்துள்ளது.








