நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு முன்னெச்சரிக்கை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (14) மாலை 4.00 மணி முதல் நாளை (15) மாலை 4.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை மட்டம் 2 – அவதானம் (செம்மஞ்சள்)
நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட, வலப்பனை, ஹங்குரன்கெத்த மற்றும் நில்தண்டஹின்ன.
இரத்தினபுரி மாவட்டம்: பலாங்கொடை மற்றும் கொலொன்ன.
எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் (மஞ்சள்)
அம்பாந்தோட்டை மாவட்டம்: கட்டுவான மற்றும் வலஸ்முல்ல.
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர, வலல்லாவிட்ட மற்றும் புளத்சிங்ஹல.
கண்டி மாவட்டம்: தும்பனே மற்றும் ஹதரலியத்த.
கேகாலை மாவட்டம்: கேகாலை, ரம்புக்கனை, தெஹிஓவிட்ட, புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, யட்டியாந்தோட்டை, வரகாப்பொல, ருவன்வெல்ல மற்றும் அரநாயக்க.
மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்க கோரளை, ரத்தோட்டை மற்றும் மாத்தளை.
மாத்தறை மாவட்டம்: முலட்டியன, அத்துரலிய மற்றும் பஸ்கொட.
இரத்தினபுரி மாவட்டம்: களவானை, வெலிகேபொல, அயகம, எஹெலியகொட, நிவித்திகலை, இரத்தினபுரி, இம்புல்பே, குருவிட்ட மற்றும் எலபாத.
பலத்த மழை காரணமாக மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்குத் தயாராக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.







