ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லாவுக்கு மேற்கே அமைந்துள்ள ராஸ் கர்கர் பகுதியில், இஸ்ரேலியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை(13) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ரப்பர் பூச்சிடப்பட்ட தோட்டாக்களால் இருவரும் தாக்கப்பட்டதாக பலஸ்தீனத்தின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.
ராஸ் கர்கர் பகுதியின் நிலங்களையும் அண்டை கிராமமான கர்பதா பனி ஹாரித் பகுதியையும் பிரிக்கும் இரும்புக் கதவைக் கடக்க முயன்ற குடியிருப்பாளர்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது காயமடைந்த இருவரும் தலையில் தோட்டாக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ரமல்லாவில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.








