ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்கான தற்காலிகப் பாதை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் ஈரானும் – ஓமானும் இணக்கத்தை எட்டியுள்ளதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில், வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்கான பாதையை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.








