ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
நிஷின் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. அபிஷேக் சர்மா 61 ஓட்டங்களையும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணிக்காக ஹசன் நவாஸ் 51 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி தங்கப் பதக்கத்தையும், பாகிஸ்தான் அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றின.








