ஞாயிற்றுக்கிழமை (27) செஷல்ஸ் அணிக்கு எதிராக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, FIFA உலக தரவரிசையில் இலங்கை ஒரு இடம் முன்னேறி 186ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
செஷல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை தேசிய கால்பந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு 4.31 தரவரிசைப் புள்ளிகள் கிடைத்துள்ளன.
இதன்படி, இலங்கை தற்போது 881.17 புள்ளிகளுடன் 186ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் இலங்கை 187ஆவது இடத்தில் இருந்தது.
இந்த வெற்றியின் மூலம், முன்னதாக இரண்டு தோல்விகளைச் சந்தித்திருந்த இலங்கை அணி, தனது அண்மைய போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை அணி மீண்டும் செஷல்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை (29) எதிர்கொள்ளவுள்ளது. இதன் மூலம் அண்மைய போட்டிகளில் பெற்ற வெற்றிகளை மேலும் தொடர இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
FIFA தரவரிசை:
https://inside.fifa.com/fifa-








