அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (28) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை கடந்த வெள்ளிக்கிழமை ரூ.325.74 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.326.00 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, விற்பனை விலை ரூ.334.80 இலிருந்து ரூ.335.08 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் சரிவடைந்துள்ளது.
மேலும், பல்வேறு நாணயங்களைக் கொண்ட கூடைக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வளைகுடா நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.








