அவுஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் (ODI) தொடர் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்த மூன்று போட்டிகளும் ரன்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் 15, 18 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இந்த ஒருநாள் தொடர் 2025–2029 ICC மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ளது.தொடருக்காக அவுஸ்திரேலிய மகளிர் அணி எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








