இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச்சை நிறைவு செய்யத் தவறிய பாகிஸ்தான் அணிக்கு 11 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நேரச் சலுகைகள் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னரும் பாகிஸ்தான் அணி 11 ஓவர்கள் குறைவாக வீசியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வீச வேண்டிய ஒவ்வொரு ஓவரும் குறைவாக வீசப்படும் சந்தர்ப்பத்தில் ஒரு புள்ளி குறைக்கப்படும்.
இதன்படி, பாகிஸ்தான் அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இருந்து 11 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பாகிஸ்தான் வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.








