எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (12) காலை வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, நாடு முழுவதும் 36 பிரதேச செயலகப் பிரிவுகள் எல் நினோ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.








