பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (12) பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
“எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மை” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மக்கள் பேரணித் தொடரின் ஒரு பகுதியாக இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் இப்பேரணி நடைபெறவுள்ளது.








