இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான ஆடைத் தொழிற்துறை மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட முக்கிய ஆடைத் தொழில்துறை ஒன்றுகூடல் நிகழ்வு, கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி புதன்கிழமை சென்னை வர்த்தக மைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கையின் முன்னணி ஆடை நிறுவனமான iKING நிறுவனத்தின் தலைவர் இஹ்சான் வாஹிட் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், முபாரக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் MSM முபாரக் மற்றும் Front Line நிறுவனத்தின் தலைவர் ரீஷா அஷ்ரப் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்தியாவின் ஆடைத் தொழிற்துறையைச் சேர்ந்த முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் பிரபலமான விஜய் பாலாஜி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும், GGMA அமைப்பின் விஜய் புரோஹித், இந்தூர் சங்கத்தின் ஆஷிஷ் நிகாம், DITGMA திருப்பூர் அமைப்பின் MKM R. பாலசுப்பிரமணியம், SIGA பெங்களூரு அமைப்பின் அனுராக் ஷிங்லா மற்றும் KAKA பெங்களூரு அமைப்பின் பிரகாஷ் போஜானி உள்ளிட்ட தொழில்துறை பிரதிநிதிகளும் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
அதேவேளை, தமிழ்நாட்டின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்களான Pothys, Maharaja, Sumangali, Pacchaiyappas உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இலங்கையின் ஆடை மற்றும் சில்லறை வர்த்தகத் துறையில் முக்கிய பங்காற்றி வரும் iKING நிறுவனத் தலைவர் இஹ்சான் வாஹிட்டின் பங்கேற்பு, இலங்கை–இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வின் ஊடாக இரு நாடுகளின் ஆடைத் தொழிற்துறையினரிடையே புதிய வர்த்தக வாய்ப்புகள், தொழில்துறை ஒத்துழைப்புகள் மற்றும் பரஸ்பர வர்த்தகத் தொடர்புகளை உருவாக்குவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.










